புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபை தீயணைப்பு வண்டி கொடூர விபத்து!!! ஒருவர் பலி!!(Video)

யாழ் மாநகரசபை தீயணைப்பு வண்டி கொடூர விபத்து!!! ஒருவர் பலி!! மேலதிக

யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் விபத்திற்குள்ளானதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை மணற்காட்டு பகுதியில் இன்றையதினம் தீயினை அணைப்பதற்காக குறித்த தீயணைப்பு வாகனம் சென்றுகொண்டிருந்தபோதே யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியை விட்டுவிலகி அருகில் வயலுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
இச்சம்பவத்தில் குறித்த வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் 37 வயதான அரியரட்ணம் சகாயராஜா எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்திற்குள்ளான தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர்  காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Image may contain: outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: one or more people, shoes and outdoor