வவுனியாவில் கல்குவாரியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு! (Photos)
வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் இருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப்பகுதிக்கு சென்ற சிறுவன் ஒருவரே கல்குவாரியில் வீழ்ந்து உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..
இம் மரணம் தொடர்பான விசாரணையை சிதம்பரபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

