புதினங்களின் சங்கமம்

கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா!! வெலிசர கடற்படை முகாம் முடக்கம்!!

இலங்கையில் மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் உள்ள கடற்படை உறுப்பினர்கள் 29 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 29 பேரும் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவர்களுக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே வேளை வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.