மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பரிதாப மரணம்!
மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பிரதான வீதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் மோதி கடந்த 20 ஆம் திகதி விபத்துக்குள்ளானதில் இரு இளஞர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியினை சேர்ந்த 25 வயது இளைஞன் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

