புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் மூன்று கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் (07) நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தம்பலகாமம்-முள்ளிப்பொத்தானை பரகுபுர கம்மான பகுதியைச் சேர்ந்த தலகல திலகரட்ண (வயது – 63) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த நபரின் வீட்டைச் சோதனையிட்ட போது அவரிடமிருந்து மூன்று கைக் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் அவரிடம் வைத்திருக்குமாறு வழங்கினார் என குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து இராணுவ வீரரைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தம்பலகாமம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.