பச்சைக் கள்ளராக மாறிய சங்கக்கடைகள்!! நிறை குறைத்துப் பொருள் விற்பனை!! அவதானம் மக்களே!!
Sitsabesan Tharmeegan என்பவரது முகப்புத்தகத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளிற்கு ஒப்பானது.
பொதுமக்களே அவதானம்….
தற்கால நாட்டு நிலமைகளையும், மக்களின் அவலங்களையும் பயன்படுத்தி பகற்கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெறுவதாக பரவலாக பேசப்படுகிறது.அவ்வகையில் இன்றையதினம் ஏழாலை மேற்கில் அமைந்துள்ள ஒரு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் திடீர் மீள்இயக்கமானது அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றதற்கு சான்று தருகிறது.அரசாங்க அறிவிப்பின் பெயரில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயத்திற்கமைவாக அரிசி,பருப்பு, சீனி முதலான அத்தியாவசிய பொருட்களின் கூட்டுவிலையாக அண்ணளவாக ரூபாய்1150.00 (+ -) நிர்ணயிக்கப்பட்டு எண்வரிசை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் (குறைந்தவிலையில்) பொருட்களை கொள்வனவு செய்த பொதுமக்களுக்கு வீடு வந்து எடையை சரிபார்க்கும் போதுதான் நிலமை புரிந்துள்ளது.
குறைந்தது_விலை_மட்டுமல்ல_பொருட்களின்_எடையும்?
(50g,100g தொடக்கம் 200g வரையில் பொருள் மோசடி செய்யப்பட்டுள்ளது)
100g சீனி,200g பருப்பு என ஒவ்வொரு பொருட்களின் நிறைக்குறைப்பானது ஒரு தினக்கூலியை எவ்வளவு பாதிக்கும் என்பதை இதை படிக்கும் நீங்கள் உணர்ந்து இது சம்பந்தமாக உங்கள் அயலவர் மற்றும் நீங்கள் தொடர்பு கொள்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.மேலும் இப்பதிவானது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்பதற்காக அல்ல. மாறாக இனி வரும்காலங்களில் இவ்வாறான ஏமாற்றுப்பேர்வழிகளிடம் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
இவ்வாறான தவறிடம்பெறாமல் தவிர்க்கும் வழிகள்:-
?ஒவ்வொரு பொருட்களின் நிறைகளையும் எடை போடும்போது அருகில் இருந்து மிக உன்னிப்பாக கவனித்தல்.
?எடை அளப்பில் சந்தேகமெனின் மீள எடை போட கூறுங்கள்(அவர்கள் தரும் பொருட்கள் இலவசமல்ல.உங்கள் பணத்திற்கானவை)
?தவறு இடம்பெறுவது தெரிந்தால் உங்களுக்கு பிறகு பொருள் வாங்க நிற்போரிடம் அதுசம்பந்தமாக விழிப்பூட்டுங்கள்.
?தராசின் பொருள் நிறுக்கும் பக்கத்தின் தட்டு இரும்பு/தகரமாக இருப்பின் கீழே காந்தம் ஒட்டவைக்கப்பட்டுள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.
?இதுசம்பந்தமான முறைப்பாட்டுக்கு (சுன்னாகம் பொலிஸ்-0212240323)
(அவசர பொலிஸ் பிரிவு- 1170)
(பொருட்களை கொள்வனவு செய்த இடத்தில் வைத்தே நடவடிக்கை எடுப்பது சிறந்தது)



