முல்லைத்தீவில் கடலுக்குள் பாய்ந்தது இராணுவ வாகனம்!! (Photos)
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து நாயாறு களப்பினுள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (21) காலை கொக்கிளாய் – முல்லைத்தீவு வீதியில் பயணித்த இராணுவ வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் சிக்கி காயமடைந்த இராணுவத்தினர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிடுவதற்கு எவரையும் இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





