யாழில் காமத்தை தூண்டும் போதை கலந்த இனிப்பு பாக்கு மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை ..!!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து
போதைப் பொருள் கலக்கப்பட்ட இனிப்பு
பாக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது யாழ் நகருக்கு அண்மையில்
கண்டறியப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் உள்ள வர்த்தக
நிலையத்தில் விற்கப்பட்ட இனிப்பு பாக்கு
போதைப்பொருள் கலக்கப்பட்டுள்ளதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதி
செய்துள்ளது.
போதைப்பொருள் கலந்த பாக்கு மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது இதனனால் மாணவர்கள் யாழ் நாகர் பகுதியில் சமுகசீர்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று கிடைத்த
தகவலின் படி குறித்த பகுதியில் சுகாதார
பிரிவினர் அண்மையில் திடீர் சோதனையில்
சந்தேகத்துக்கிடமான வர்த்தக நிலையத்தை
முற்றுகையிட்டு சோதனையிட்டபோது, அங்கு
மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு
கொண்டிருந்த இனிப்புகளை சுகாதாரப்
பிரிவினர் கைப்பற்றினர். வர்த்தக நிலைய
உரிமையாளரையும் சுகாதார பிரிவினர்
நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
சான்றுப் பொருள் இனிப்பு பாக்கு
போதைப்பொருள் கலக்கப்பட்டுள்ளதா
என்பதை கண்டறிய அதனை அரச
பகுப்பாய்வுக்கு அனுப்புமாறு யாழ்ப்பாண
மேலதிக நீதிவான் நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரச
பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பாக்கு
அனுப்பப்பட்டது.
மாணவர்களுக்கு போதையூட்டப்பட்ட
பொருட்கள் இனிப்புப் பொருட்கள்
கலக்கப்பட்டு மாணவர்களுக்கு தெரியாமல்
விற்பனை செய்யப்படுகின்றன எனபலரும்
சுட்டிக் காட்டி வருகின்ற நிலையில், அது
உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை
கிடைக்கப்பெற்றது. பாக்கில் போதைப்
பொருள் கலந்துள்ளது என்பதை பகுப்பாய்வு
திணைக்களம் உறுதி செய்திருந்தது.
இதை அடுத்து வர்த்தக நிலைய
உரிமையாளர் மீதான வழக்கு விசாரணைக்கு
வரவுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு
வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

