புதினங்களின் சங்கமம்

மீன் வாகனத்தில் யாழிற்கு கடத்தப்பட்ட கொடூர பொருள்! பொலிஸாரின் அதிரடி!!(Photos)

மகேந்திரா ரக வாகனத்தில் மீன் ஏற்றிச் செல்லும் விதத்தில் றெஜிபோம் பெட்டிகளில் மறைத்து வைத்து யாழிற்கு கொண்டு செல்லப்பட்ட பெரும் தொகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதி,மாந்தை சந்தியில் வைத்து நேற்று இரவு குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நானாட்டான் மற்றும் பேசாலையைச் சேர்ந்த 40 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் குறித்த கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் வாகனம் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதி வய்ந்தவை என தெரிய வருகின்றது.

No photo description available.No photo description available.Image may contain: one or more people, people standing and outdoorNo photo description available.Image may contain: outdoor