புதினங்களின் சங்கமம்

டிப்பரை திருட சாரதி அடித்துக்கொலை – மனம்பிட்டி பாலத்துக்கருகில் சம்பவம்!

மனம்பிட்டி கொட்டாலிய பாலத்திற்கு அருகில் ஒரு கொள்ளையர் குழு டிப்பர் வாகனத்தை கடத்திச் சென்று டிப்பரின் சாரதியை கொடூரமாகக் தாக்கி காட்டில் விட்டுச் சென்றார்.

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் உடல் நேற்று (19) மீட்கப்பட்டது அவரது முகம் கூட அடையாளங்காண முடியாத வகையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த சாரதி 29 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான எச்.ஜி. துஷார சந்துன் என்பராகும்