16 வயது சிறுமியுடன் யாழ் பிரபல ஹோட்டலில் றுாம் எடுத்து காம லீலை!! உரிமையாளர், ஊழியர்கள் கைது!!
யாழில் 16 வயது இளம் யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய குற்றச்சாட்டில் யாழ் நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் பணியாளர் ஒருவரும் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,
யாழ்மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம் காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற இளைஞன் ஒருவர் யுவதியுடன் காதல் வார்த்தைகள் பேசி யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் விடுதியிலேயே குறித்த இளம் யுவதியை விட்டுவிட்டு இளைஞன் அங்கிருந்து மாயமாகியுள்ளார்.
இந்நிலையில் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்ற இளைஞன் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள மகளீர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து யாழ் நகரில் இயங்கி வரும் குறித்த பிரபல விடுதியின் உரிமையாளரும் அங்கு பணியாற்றும் ஊழிய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

