வடக்கு ஆளுநராக வருவதற்கு சண்டை போடுகின்றனராம் இரு தமிழ்பிரமுகர்கள்??
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஜனாதிபதியாக கோத்தா பதவியேற்பதற்கு முன்னரே வடக்கு ஆளுநர் பதவிக்காக பலரும் அடிபிடிப்படுவதாக தெரியவருகின்றது. இதில் இரு தமிழர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மற்றும் டான் ரீவி முதலாளி குகநாதன் ஆகியோரே ஒவ்வொருவரைப் பற்றி மற்றவர்கள் மாறி மாறி ஜனாதிபதிக்கும் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

