புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டு பைத்தியமான வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்களை ஏமாற்றிய பச்சைக் கள்ளன் கைது!!

இலங்கையில் இருந்து வெளிநாட்டு அனுப்பிவைப்பதாக கூறி நட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய ஜே.கே.எனப்படும் ஆட்டகடத்தல்காரன் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் போலியான கடவுச்சீட்டு மூலம் நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வெளிநாடு செல்வதற்காக பணத்தினை கொடுத்து ஏமாந்த மக்கள்.

ஜே.கே என்ற பெயருடன் இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டுப்பகுதியில் பாரிய பண்ணை ஒன்றினைநிறுவி அதில் சிலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கிவந்துள்ளார்.இந்த வேலையுடன் வெளிநாட்டிற்கு ஆட்களை ஏற்றுவதாக தெரிவித்து உடையார் கட்டுப்பகுதியினை சேர்ந்த சுமார் 10 பேருக்கு மேற்பட்டவர்களிடம் சராசரி பத்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார். இதுதொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் உரிய நபர் இல்லாத நிலையில் பணத்தினை கொடுத்தவர்கள் ஏமாந்துள்ளார்கள்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் மன்னாரிலும் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களிலும் இவ்வாறு பல இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக ஏமாற்றி பாரியளவிலான பண மோசடியினை மேற்கொண்டுள்ளார்.பல இடங்களில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமேசடியில் ஈடுபட்டுள்ளவேளை பாதிக்கப்பட்டவர்கள் பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.பல மாவட்டங்களில் இவரின் பதிவு முகவரிகள்.முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா பதுளை கொழும்பு போன்ற முகவரிகளில் தங்கியுள்ள பதிவுகள் காணப்படுகின்றன.

வெளிநாட்டிற்று செல்லவுள்ளவர்களை ஏமாற்றும் சூழ்ச்சி தந்திரம்..

வெளிநாட்டிற்கு குறிப்பாக கனடாவிற்கு ஏற்றுவதாக தெரிவித்து ஒரு குழுவாக ஆட்களை சேர்ப்பது அவர்களிடம் இருந்து முதற்கட்டம் ஒருதொகை பணத்தினை பெற்றுக்கொண்டு அதில் இருந்து தனக்கு விசுவாசமான ஒருவரை அழைத்துக்கொண்டு மத்திய மலைநாட்டு பகுதிகளுக்கு சென்று அவரை போட்டோ எடுத்து அதனை கிராபிக் செய்து கனடாவில் இறங்கிவிட்டால் போல் கனடா நாட்டின் புகைப்படங்களை இணைத்து செய்து அதனை அவரின் முகநூலில் போட்டு அவரை மறைத்து வைத்துக்கொண்டு மற்றவர்களை நம்பவைத்து பணம்பறிக்கும் நடவடிக்கையிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தொலைபேசி இலக்கங்களை கொடுத்து பணத்தினை வாங்கிவிட்டு பின்னர் தொலைபேசி அழைப்பினை துண்டித்து விடும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த நபரினை நம்பி பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ள நிலையில் பொலீசாரிடம் இவர் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்ட போதும் அவரை இதுவரை கைதுசெய்யவில்லை.இந்த நிலையில் தலைமறைவான நிலையில் இருந்த குறித்த ஆட்கடத்தல் காரர் கடந்த 30.08.23 அன்று கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வெளிநாட்டிற்கு பயணிக்க இருந்த வேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வழங்குகள் யாழப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 07.09.23 அன்று மல்லாகம் நீதிமன்றில் இவரை முன்னிலைப்படுத்தியபோது 21.09.23 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் இவர் மீதான மற்றும் ஒரு வழங்கு விசாரணை பருத்துறை நீதிமன்றில் காணப்படுகின்றது.போலி கடவுசீட்டு தொடர்பான வழங்கு விசாரணை கல்கிசை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் 21.09.23 அன்று பருத்துறை நீதிமன்றில் வழங்கு விசாரணை ஒன்றும் இடம்பெறவுள்ளது
02.10.23 அன்று மல்லாகம் நீதிமன்றிலும் இவர் தொடர்பான வழங்கு விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளது..