புதினங்களின் சங்கமம்

யாழ் கச்சேரியில் உண்ணாவிரதமிருந்த தம்பிராசா குஞ்சு தெரிய தெரிய பொலிசாரால் இழுத்துச் செல்லப்பட்டார்!! (Photos)!!

திரு. தம்பிராசா அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட காட்சி இது.

இதற்கு பலர் நக்கல் அடித்தும், பல சிரித்துக்கொண்டும் பதிவுகளை இடுகின்றார்கள்.

ஒரு சிங்கள அரசியல் வாதியொருவரை, அல்லது பிக்கு ஒருவரை அவருடைய ஆடை அவிழ்ந்து வீழும் வகையில் கைது செய்ய முடியுமா?

இதனை தான் சிங்கள அடக்குமுறை என்கின்றோம். அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கின்றதா?

கொழும்பு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையாளரிடம் கேட்ட தம்பிராசாவுக்கு சிங்களத்தில் அதனை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழில் வழங்காவிட்டால் ஆணையாளர் பதவி விலகுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்த அவரை பொலிஸ் கைது செய்திருக்கின்றது.

அவரது கோரிக்கையில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அறமற்ற அல்லது இனவாதமான முறையில் பொலிசார் முன்னிலையில் நடந்த பிக்குகளை, சிங்கள அரசியல் வாதிகளை பொலிசார் கைது செய்திருக்கின்றார்களா? வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள்.

இதற்கு அண்மைய உதாரணங்கள் கண்ணியா, நீராவியடி.

ஆனால் தமிழர்களின் வேட்டி அவிழும்போது அதனை பார்த்து சிரித்து கொண்டு பொலிஸ் கைது செய்கின்றது.

இதனை பார்த்து எங்களுடையவர்களும் சிரிக்கின்றார்கள். அவிழ்ந்தது தம்பிராசாவின் வேட்டி மட்டுமல்ல உங்களுடையதும் தான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி ….

முகப்பக்கம்…..

Image may contain: 1 person, outdoor

Image may contain: one or more people, car, tree and outdoor

Image may contain: one or more people, people standing, tree, hat and outdoorஜனாதிபதி தேர்தல் தபால்மூல வாக்களிப்பின் போது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடுபவர்களின் பெயர் விவரங்கள் தனிச் சிங்கள மொழியில் வழங்கப்பட்டது. இதனை தமிழ் மொழியில் தருமாறு கோரியிருந்த போதும், அந்த பெயர் விபரங்கள் தமிழ் மொழியில் வழங்கப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை பதவி விலகுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை அவர் யாழ்.மாவட்ட தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக உணவு ஒறுப்புப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார்.

அவர் போராட்டத்தினை ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுகலக அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people, car and outdoorImage may contain: 1 person, standing and outdoor