இவன் ஒரு வித்தியாசமான கள்ளன்!! தேடுகின்றது இலங்கைப் பொலிஸ்!! (Photos)
இந்த வருடத்தின் கடந்த ஜூலை மாதம் யக்கல பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து ரூ .2.7 மில்லியனை மோசடி செய்ததாக நம்பப்படும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஜப்பானில் இருந்து பதிவு செய்யப்படாத வாகனத்தை இறக்குமதி செய்வதாக உறுதியளித்து குறித்த சந்தேகநபர் இந்த பணத்தைப் பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
பொலிஸாரின் விசாரணையை அடுத்து சந்தேகநபர் தனது இல்லத்திலிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபரின் இருப்பிடம் அல்லது விபரங்கள் குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
உத்தியோகத்தர் கொழும்பு மோசடி விசாரணை பணியகம் – 011 2673 581/011 2675 651

