யாழ் றுாபி நகைக்கடையில் வாடிக்கையாளரை கேவலப்படுத்திய முதலாளி!!
யாழ் கஸ்துாரியார் வீதியில் உள்ள றுாபி என்ற பெயரில் உள்ள நகைக்கடை ஒன்று வெளிநாட்டுபு் பணப்பரிமாற்றம், உண்டியல் சேவையை நடாத்தி வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்புவதற்கு இவ்வாறான உண்டியல் சேவை நிலையங்களையே நாடுவது வழக்கம். இவ்வாறான நிலையில் வெளிநாட்டிலிருந்த தனக்கு அனுப்பிய பணத்தை வாங்கச் சென்ற வாடிக்கையாளரை கேவலப்படுத்தி துரத்தியுள்ளனர் றுாபி நகைக்கடைக்காரர்கள்.
வாடிக்கையாளர்களை எவ்வாறு மதித்து நடக்க வேண்டும் என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு பூச்சியம் அளவான அறிவே உள்ளது. யாழ்ப்பாண வர்த்தகர்கள் தவிச்ச முயல் அடிப்பது போல் யுத்த காலத்தில் பொருட்களை பதுக்கு வைத்து அறா விலைக்கு விற்று கொள்ளை லாபம் பெற்றது போல் தற்போது விற்கமுடியாது தமது வியாபாரத்தை நடாத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாது பல வர்த்தகர்கள் திரு திரு என முழித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் மிக லாபகரமான வியாபரத்தை நடாத்தி தமது பிரதேசத்துக்கு யாழில் உள்ள வளங்களைக் கொண்டு செல்கின்றனர். யாழ்ப்பாண வர்த்தகர்களின் கேவலமான வியாபார நடவடிக்கைக்கு றுாபி நகைக்கடைக்காரர்கள் சிறந்த உதாரணத்தை தருகின்றார்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம் அனுப்புபவர்களே….. பாத்திரமறிந்து பிச்சை போடுங்கள்…..

யாழ்ப்பாணத்தில் வாடிக்கையாளர் ஒருவரை வர்த்தக நிலையம் ஒன்று அவமதித்தது தொடர்பான
விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வலுத்து வருகிறது.
மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்படாத உண்டியல் நடவடிக்கையில் ஈடுபடும் யாழ் நகரத்தில்
ஈடுபடும் நகைக்கடை ஒன்று, வாடிக்கையாளருடன் அநாகரிகமாக நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்
தெரிவித்துள்ளார்.
பணத்தை பெற சென்றவரிடம், வெளியில் சென்று காலணியை கழற்றிவிட்டு வருமாறு
கடையிலிருந்தவர் சொல்லியுள்ளார். பணத்தை பெற சென்றவர்,இது வாடிக்கையாளரை அவமதிக்கும்
செயல் என குறிப்பிட்டு விட்டு, வெளியில் சென்று காலணியை கழற்றிவிட்டு வந்து உள்ளே
அமர்ந்துள்ளார்.
பணத்தை பெற வந்தவர், தம்முடன் திருப்பி கதைத்துவிட்டார் என மூக்கின் மேல் கோபம் வந்த
கடைக்காரர்கள், காசளரிடம் “இவரை அனுப்பி விடுங்கள். இவருக்கு பணம் கொடுக்க முடியாது“
என தெரிவித்துள்ளனர். அத்துடன், பணம் கொடுக்காமல் அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
வாடிக்கையாளர்களுடன் எப்படி நடப்பது என்ற அடிப்படை அறிவுமில்லாமல், அராஜகமாக நடந்து
கொண்ட அந்த வர்த்தக நிலையத்தின் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டு
வருகிறது.
முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களையும், இந்த “மூக்குப்புடைத்த“ வர்த்தக நிலையங்களையும்
ஒப்பிட்டு பலரும் பதிலிட்டு வருகிறார்கள்.

