புதினங்களின் சங்கமம்

வவுனியா இளைஞனின் கனடா மோகம்!! 12 வயது கூடிய விவாகரத்தான பெண்ணுடன் திருமணம்!!

தன்னை விட 12 வயதான விவாகரத்தான கனடாவில் குடியுரிமை பெற்ற முல்லைத்தீவை பிறப்பிடமாகக் கொண்ட 40 வயதான பெண்ணைப் பதிவு திருமணம் செய்துள்ளார் வவுனியாவைச் சேர்ந்த 28 வயதான இளைஞன். கொழும்பில் புடவைக்கடை ஒன்றில் காசாளராக இருக்கும் குறித்த இளைஞன், சில மாதங்களுக்கு முன் கனடாவைச் சேர்ந்த பெண் தனது நெருங்கிய உறவு ஒன்றின் திருமணத்திற்காக கொழும்பு வந்திருந்த வேளையில் திருமணப் புடவைகளை தெரிவு செய்வதற்காக நட்பு ரீதியாக தொடர்பில் இருந்துள்ளார். தொலைபேசி இலக்கங்கள் பரிமாறப்பட்ட பின்னர் தனிப்பட்ட ரீதியில் இருவரும் கதைக்க தொடங்கியுள்ளனர். இளைஞன் உட்பட புடவைக்கடையில் வேலை செய்யும் பலரும் அந்தக் கடையிலேயே தங்கி வந்துள்ளனர். இந்தப் பெண்ணின் நட்பு கிடைத்தவுடன் அவ் இளைஞன் தனியாக அறை எடுத்து தங்க தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஏனைய கடை ஊழியர்கள் இளைஞனை கேட்ட போது அந்தப் பெண்ணை தான் காதலிப்பதாக கூறியுள்ளார். அத்துடன் அந்தப் பெண் கனடாவில் குடியுரிமை பெற்றவர் என்பதை மட்டும் தெரிவித்துள்ளார். அந்த இளைஞனுக்கு குறித்த பெண் தனது வயதை குறைத்தே கூறியுள்ளார். அதன் பின்னர் திருமணப் பதிவு தினத்திலேயே கடை ஊழியர்கள் குறித்த பெண்ணின் வயதை அறிந்து அதிர்ந்துள்ளனர். இது தொடர்பாக காசாளரான இளைஞனுக்கு தெரியப்படுத்திய போதும் அவன் அது தொடர்பாக அக்கறை செலுத்தாது இருந்ததாக கடை ஊழியர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதலில் குறித்த பெண்ணின் கணவர் விபத்தில் இறந்து விட்டதாக இளைஞன் தெரிவித்த போதும் அப் பெண் விவாகரத்துப் பெற்றவர் என்பது பின்னரே கடை ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. வவுனியாவை சேர்ந்த அந்த இளைஞனின் உறவுகளும் இளைஞனின் இந்தத் திருமணம் தொடர்பாக பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் செய்யவில்லை என்றும் இளைஞனுக்கு ஆதரவாகவே அவர்கள் நடந்து கொண்டதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.