புதினங்களின் சங்கமம்

காதல் கணவர் இறந்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு..!! இப்படியும் ஒரு காதலா ??

காதல் கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த மறுநாளே அவருடைய மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வந்த பாலாஜி (22) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரசிதா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் பாலாஜி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சொந்த வேலையாக சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லொறி வேகமாக மோதியதில், தூக்கி வீசப்பட்டு அவருடைய தலை சக்கரத்தின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைக்கு முன்தினம் பாலாஜியின் இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், ரசிதா மட்டும் சோகத்துடன் தனியாக அழுதுகொண்டே இருந்துள்ளார்.

நேற்று காலையில் அவருடைய அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ரசிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.