புதினங்களின் சங்கமம்

கலா அக்கா மீது எடுத்த நடவடிக்கை என்ன? நீதிமன்றம் கேட்ட கேள்வி இது

புலிகளின் மீளுருவாக்கம் குறித்து முன்னாள் அமைச்சர் விஜயகால மகேஸ்வரன் கருத்து
தெரிவித்த விவகாரத்தில் அவர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து
நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் சட்டமா அதிபர்
திணைக்களத்திற்கு இன்று (1) உத்தரவிட்டுள்ளது.

2018 ஜூலை மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது விஜயகலா மகேஸ்வரன் இந்த
கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, வாக்குமூலம் பெற சிஐடிக்கு அழைக்கப்பட்ட
அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கின் விசாரணைகள் குறித்த இறுதி அறிக்கை சட்டமா
அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி)
நீதிமன்றத்திற்கு இன்று அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த வழக்கைத் தொடர சட்டமா அதிபர் திணைக்கடத்திடமிருந்து இன்னும் சட்ட ஆலோசனைகளைப்
பெறவில்லை என்று சி.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்கு
டிசம்பர் 13ம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.