Home புதினங்களின் சங்கமம் Peppermint Cafe மீண்டும் ஒரு திருவிளையாடல்!! ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய்கள் (Video)

Peppermint Cafe மீண்டும் ஒரு திருவிளையாடல்!! ஒரு பொய்யை மறைக்க மேலும் பொய்கள் (Video)

Peppermint Cafe பெருமையுடன் வழங்கும்,
‘ஐந்து முதுகெலும்பில்லா அடிமைகள்’.

“நானும் தமிழன்தான்” என்று சொல்லும்போது குரல் தழுதழுத்திருக்கவேண்டும். இரண்டு துளியேனும் கண்ணீர் வந்திருக்கவேண்டும். அந்தக் கண்ணீர் கன்னத்தால் வழிந்து கீழே விழும்வரை துடைக்காமல் விட்டிருக்கவேண்டும்.

தாங்கள் எவ்வளவு தூரம் தமிழையும் தமிழரையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம் என்று ஒரு சிங்களவரையும் உணர்ச்சிகரமாக வசனம் பேசவைத்திருக்கவேண்டும்.

படம் முடியும்போது சிங்களவர், தமிழர், முஸ்லிம், பேர்கர் (Burgher) ஆகியோர் ஒன்றாகக் கைகோர்த்துக்கொண்டு நின்று,
“ஜாத நெத்தி… பேத நெத்தி…
லஸ்சன லொவ ஹெட்ட அப்பிட்ட உதாவேவா…”
(ஜாதியில்லை, பேதமில்லை
அழகிய உலகம் நாளை மலர்கிறது) என்று பாடியாடியிருக்கவேண்டும்.

கதாநாயகனும் 4 துணை நடிகர்களும் மட்டுமே ஒட்டுமொத்தப் பாத்திரங்கள். ஒரு கதாநாயகியையென்றாலும் நடிக்கவைத்திருக்கலாம். சாப்பாட்டுக்கடையில் பாத்திரங்களுக்கா பஞ்சம்?

ஒட்டுமொத்தத்தில்…
நல்ல நடிப்பு.
நகைச்சுவை வசனங்களை எழுதியவருக்குப் பாராட்டுகள்.

ஆனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளரும் சரியில்லை.