ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நேரம் அதிகரிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை நீடிப்பதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரத்தை மேலும் 1 மணித்தியாலத்தால் நீடிக்கும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்தது.

இதனையடுத்து இந்த யோசனைக்கு அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)