புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் பளைப் பகுதியில் தீபாவளி தினத்தன்று ஒருவர் அடித்துக் கொலை

தீபாவளி தினத்தன்று நேற்று (28) இயக்கச்சி பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

பளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இயக்கச்சியை சேர்ந்த தர்மலிங்கம் தங்கராசா (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலையில் ஏற்பட்ட மோதல் மாலையில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

அடித்துக் கொலை செய்ததாக தெரிவிக்ப்படும் நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(கிளிநொச்சி நிருபர் நிபோஜன்)