யாழில் முதலாளி கெஞ்சக் கெஞ்ச மினபஸ்சை கொழுத்திய நடத்துனர்!! தீபாவளி சாராய வெறி (Video)
யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று உரிமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தீயில் எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சிறுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றது. இனந்தெரியாதோரால் பேருந்து தீயிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் போதும் அச்சுவேலிப் பொலிஸார் தற்போதுதான் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ,”பேருந்தின் உரிமையாளர் சாரதி, நடத்துனர் என சிலருக்கு தீபாவளியை முன்னிட்டு நேற்றிரவு மது விருந்து வைத்துள்ளார். விருந்தின் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் பேருந்தின் உரிமையாளர் நடத்துனரைத் தாக்கியுள்ளார். அந்த ஆத்திரத்தில் நடத்துனர் மேலும் 3 பேரைக் கூட்டிவந்து மினிபஸ்சிற்கு தீ வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.




