புதினங்களின் சங்கமம்

கோத்தாவே யாழ் வர உனக்கென்ன அருகதை – யாழில் ஆர்ப்பாட்டம் (Photos)

பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் யாழ்
விஐயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று
கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐனாதிபதி தேர்தல்
பிரச்சாரத்துக்காக கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலர்
இன்று யாழ்பபாணத்திறகு விஜயம் செய்யவுள்ளனர்.

இந்
நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தபாயவின் வருகைக்கு எதிர்ப்பு
வெளியிட்டு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்
போது கோட்டாபயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளை வான்
முதலாளியே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, ஐ.நா அமைதிப்படையே வா, சர்வதேச
நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோட்டாவை கைது செய்,
பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து, கோத்தாவே யாழ் வர உனக்கென்ன அருகதை
என்பனபோன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.