புதினங்களின் சங்கமம்

யாழ் சயன்ஸ் ஹோலில் குணசீலன் சேரிடம் படித்த மாணவன் கூறுவது என்ன?

முல்லைத்தீவு – விசுவமடுவை சேர்ந்த பிள்ளை – மருத்துவமாணவனாக ஏற்றிவைக்கப்பட்ட உண்மைக்கதை!

இறைவன் இறங்கி எங்களோடும் வாழ்வதுண்டு!??
ஒரு சமூகச்சிற்பியின் கைபட்ட வெறுங்கற்கள் – சிலையான கதையை நிமிர்ந்து பேசுகின்றன, அன்பும் – நன்றியும் நிறைத்து!!

/// முதலாம் தடவை A/l பரீட்சை எழுதி படு கேவலமான Result (B2S) எடுத்திட்டு 2nd shy படிக்க யாழ்ப்பாணம் போனன்..வீட்டில சரியான கஸ்ரம்..நிறைய கடன்கள் வேற…எல்லாரும் சொன்னாங்கள் #குணசீலன் Sir ட்ட போய் கதைச்சுப் பார் என்டு…
அவருக்கு கிட்டப் போறதே எனக்கு அப்பிடிப் பயம்…

 

 

முதலாம் தடவை A/l பரீட்சை எழுதி படு கேவலமான Result (B2S) எடுத்திட்டு 2nd shy படிக்க யாழ்ப்பாணம் போனன்..வீட்டில சரியான கஸ்ரம்..நிறைய கடன்கள் வேற…எல்லாரும் சொன்னாங்கள் #குணசீலன் Sir ட்ட போய் கதைச்சுப் பார் என்டு…அவருக்கு கிட்டப் போறதே எனக்கு அப்பிடிப் பயம்…
குணா சேருக்குப் பக்கத்தில போய் நடுங்கிக் கொண்டு சொன்னன்.. ” சேர்..வீட்டில கொஞ்சம் கஷ்டம் சேர்….(மௌனம்)…..என்னைச் சிறிது உற்றுப் பார்த்தார்…கையிலிருந்த என் டியூசன் கார்ட்டைப் பார்த்து….”கொண்டாங்கோ கார்ட்ட..” என்றார்…நீட்டினேன்…ஒரு பெரிய சைன்..300/- என எழுதி வட்டம் போட்டார்…”இனி மாதம் மாதம் 300/- கட்டினால் காணும்” என்று விட்டு எழுந்தார்..அட…3500/- டியூசன் காச 300/- ஆக்கியிருக்கிறார்…அத்தருணம் அவரில் கடவுளைப் பார்த்தேன்…பெருங்கஷ்டத்தின் மத்தியில் #இருவேளைச்_சாப்பாட்டுடன் யாழில் தங்கி நின்று படிக்க வந்த எனக்கு அவர் கடவுளே…சரி 2nd shy exam எழுதி Results வந்தது.. ABC – 10 th rank…இப்பவும் Medicine கிடைக்கேல..
எனக்குத் தெரியும் ….நான் மூன்டாவது தட வை படிச்சா Sure ஆ Medicine போவனென்டு தெரியும்…ஆனா…வீட்டுல பிரச்சனையால படிக்கவே விருப்பமில்ல…கிடைக்கிற Courseக்கு போவமென்டு பேசாம இருந்தன்..ஆனா அம்மாவும் அண்ணாவும் வீட்டில ஒரே கரைச்சல் குடுத்தாங்கள் திரும்பிப்படி என்டு..என்ர வீட்டுப் பிரச்சினை எனக்கெல்லோ தெரியும்…நான் போகமாட்டன் என்டுட்டன்…இருந்தாலும் இந்த 2nd shy result க்கு காரணமே குணா சேர் தானே…இந்த Result ஐ அவரிட்ட சொல்லீட்டு வருவமென்டு Science Hall க்கு போனன்….

அங்க office room ல சேர் யாரோ ரெண்டு பேரோட கதைச்சிட்டு இருந்தார்..அவர் Free ஆ படிப்பிச்சதுக்கு நான் நல்ல Result எடுக்கேலயே…என்டுற ஏக்கத்தோட பயந்து கொண்டு வாசல்ல நின்டன்.. ” உள்ள வாங்கோ தம்பி” என்றார்…”என்ன Result?” என்றார்..
#நான் : ABC Sir..10th rank in mullai district..medicine கிடைக்கேல….என்ன Course போடலாம் சேர்??
#குணா_Sir : இப்ப 2nd shy தானே எடுத்தனியள்..இன்னொரு Shy இருக்குத்தானே..வந்து படியுங்கோ..”
#நான் : இல்ல சேர்..உங்களுக்குத் தெரியும் தானே..வீட்ல கொஞ்சம் காசுப் பிரச்சினை…என்டு இழுத்தேன்..
#குணா_சேர் : அத நானும் அருளண்ணையும் பாத்துக் கொள்ளுவம்..வந்து படி..அடுத்த class வகுப்பில நீ இருக்கோணும் ” என்றார் அதட்டலாக…
விடைபெற்று வெளியேறினேன்…அவரது அறிவுரைகளையே வேத வாக்காகக் கொண்டு இன்பங்கள் மறந்து படித்து 3rd shy எழுதினேன்..Results வந்தது..2AB – 3rd rank..
நேரில் சென்று “சேர் நான் வென்று விட்டேன்..Medicine கிடைச்சிட்டு ” என்றேன்…புன்னகைத்தார்..உண்மையில் வென்றது நானல்ல..அவரென்பதை உணர்ந்தேன்..
நான் அவரிடம் தான் கடவுளை முதலில் கண்டேன்…எங்கோ மூலையில் கிடந்த என்னை இவ்வளவுக்கு ஏற்றி விட்டவர்..என் #முழுமுதற்_கடவுளுக்கு இன்று பிறந்தநாள்..
#முழுமனதோடு வாழ்த்துகிறேன்…
#வாழ்க_வளமுடன்..???

நீங்கள் பாடம் கற்பித்ததை விட எப்படி வாழ வேண்டுமென்று எனக்கு மட்டுமல்ல…தங்களின் ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்…
ஒரு #கண்டிப்பான_குரு
#அன்பான_வழிகாட்டி
#அறிவுச்_சிகரம்
#எளிமையின்_வடிவம்

நன்றி

Jude Sajith பேஸ்புக்