புதினங்களின் சங்கமம்

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரொருவர் மீது இனம் தெரியாதோர் தாக்குதல்

வவுனியாவில் ஆசிரியரொருவர் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர் பாடசாலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த போது சமளங்குளம் சந்தியில் வைத்து அவரை வழிமறித்த மூவர் தாக்கிவிட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் செல்வசந்திரன் என்ற ஆசிரியரே தாக்குதலிற்குள்ளாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியர் வருகை தரும் போது வழிமறித்து அவரது மோட்டார் சைக்கிள் இலக்கம் மற்றும் பெயர் விபரங்களை கேட்ட பின்னரே தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.