புதினங்களின் சங்கமம்

லண்டனில் 39 சடலங்களுடன் திரிந்த லொறியால் பெரும் பதற்றம்!! திகில் காட்சிகள்!!

இன்று அதிகாலை சுமார் 1.40 மணி அளவில், பிரித்தானியாவின் எசிக்ஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான கண்டேனர் லாரி ஒன்றை பொலிசார் வழிமறித்துள்ளார்கள். ஓட்டுனரின் நடத்தை மேலும் சந்தேகத்திற்கு இடமாக இருக்கவே. குறித்த லாரியை அவர்கள் சோதனை செய்தவேளை. அதில் சுமார் 39 உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில், இந்த லாரி பல்கேரியா நாட்டுக்கு சொந்தமானது என்றும். ஆனால் இதனை ஓட்டி வந்த ஓட்டுனர் அயர்லாந்தை சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து படகு மூலம், அகதிகளை கொண்டுவந்து. அயர்லாந்தில் இருந்து பின்னர் பிரித்தானியாவுக்குள் கொண்டு வரும் வழியே இது என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு கண்டேனர் லாரியில் அடைக்கப்பட்டு அயர்லாந்தில் இருந்து பிரித்தானியா கொண்டு வரும்வேளை. இவர்கள் அனைவரும் மூச்சு திணறி இறந்துவிட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது. குறித்த 39 பேரில் சிலர் இளைஞர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இச்சம்பவம் பிரித்தானியா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மனிதப் படுகொலை குற்றத்திற்காக ஓட்டுனரை பிரித்தானிய பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.