Home புதினங்களின் சங்கமம் பஸ்சில் மாணவியின் திருவிளையாடல்! தம்பதி அதிர்ச்சி!

பஸ்சில் மாணவியின் திருவிளையாடல்! தம்பதி அதிர்ச்சி!

பயணிகளின் கைப்பைகளில் இருந்து பணம் மற்றும் ஆவணங்களைத் திருடும் புதிய நூதன முறை தொடர்பான சம்பவம் ஒன்று, கடந்த 5ஆம் திகதி கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. அன்று காலை சுமார் 7 மணியளவில், கொரளஇமவிலிருந்து பிலியந்தலை நோக்கிப் பயணித்த பேருந்து பயணிகளால் நிரம்பியிருந்தது.

அந்தப் பேருந்தின் முன்பக்க இருக்கையில் பாடசாலைச் சீருடை அணிந்த மாணவி ஒருவரும் அவரது தாயாரும் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள அலுவலகமொன்றில் பணியாற்றும் இளம் தம்பதியினர், கெஸ்பேவ நோக்கிச் செல்வதற்காக பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் பேருந்தில் ஏறினர்.

பேருந்தில் அதிகளவான பயணிகள் இருந்ததால், தங்களிடம் இருந்த பயணப் பைகளுடன் அவர்கள் சிரமத்துடன் பயணித்தனர்.

அப்போது, முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவி, குறித்த தம்பதியினரின் கையிலிருந்த பயணப் பையொன்றை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருந்ததால், அந்தத் தம்பதியினர் பேருந்தின் நடுப்பகுதிக்குத் தள்ளப்பட்டனர். தங்களது பை பாடசாலை மாணவியின் கையில் இருந்ததால், அவர்கள் அதுகுறித்து எவ்வித சந்தேகமும் கொள்ளவில்லை.

கெஸ்பேவ பகுதியை அண்மித்ததும் பேருந்திலிருந்து இறங்கிய அந்தத் தம்பதியினர், கொழும்பு நோக்கிச் சென்ற மற்றொரு பேருந்தில் ஏறினர்.

சிறிது தூரம் பயணித்த பின்னர், பேருந்துக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகப் பையைத் திறந்தபோதே அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

பையின் பணப்பையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 ரூபாய் பணம் மற்றும் முக்கியமான ஆவணங்கள் காணாமல் போயிருந்தன.

இதனால் பதற்றமடைந்த தம்பதியினர், பையின் ஏனைய பகுதிகளையும் அவசரமாகச் சோதனையிட்டனர். சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் வேறு தேவைக்காகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவற்றையும் தேடினர்.

எனினும், அதிர்ஷ்டவசமாக அந்தப் பணமும் கையடக்கத் தொலைபேசியும் திருடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தில் பயணிகளின் நெரிசலைப் பயன்படுத்தி, மாணவியின் வேடத்தில் இவ்வாறு பணம் மற்றும் ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments