இறந்த தமிழ் அழகியை உயிர்ப்பித்து அனுபவிக்க ஆசைப்படும் கோத்தா – குகநாதன்!! கூட்டணி
ஶ்ரீலங்கா தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் கோத்தா தரப்பு யாழ்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகையொன்றை மீள வெளியிட தீர்மானித்துள்ளது.
கடந்தகால தேர்தல் முடிவுகளையும் தற்போது உள்ள ஆதரவுத் தளத்தையும் கணக்கிட்டு எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு களமிறங்கியுள்ள கோத்தா தரப்பு முன்னைய மகிந்த ஆட்சிக்காலத்தில் கோத்தாவின் புலனாய்வு அணியாக செயற்பட்ட குகநாதனிடம் (டான் ரீவி) பத்திரி கை வெளியிடும் பணியை ஒப்படைத்திருக்கிறது.
யாழில் இருந்து முன்னர் வெளிவந்திருந்த ஈழநாடு பத்திரிகை கையிலெடுத்துள்ள கோத்தா+குகநாதன் தரப்பு வெகுவிரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து பத்திரிகையை பிரசுரம் செய்யவுள்ளது

