Home புதினங்களின் சங்கமம் சர்வதேச விமானநிலையத்தில் 700 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான தங்கக் கட்டிகள் கொள்ளை!! புலம்பெயர் தமிழ்...

சர்வதேச விமானநிலையத்தில் 700 கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான தங்கக் கட்டிகள் கொள்ளை!! புலம்பெயர் தமிழ் கொள்ளையன் பிரசாத் பிடிபட்டது எப்படி?

டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 22.5 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிராம்டனைச் சேர்ந்த 37 வயதான பிரசாத் பரமலிங்கம் மெக்சிகோவின் கான்ஸ்குன் சுற்றுலா நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தலைமறைவான இவர், அமெரிக்கா ஊடாக சட்டவிரோதமாக மெக்சிகோவிற்குள் நுழைந்துள்ளார். சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மெக்சிகோ பொலிஸார் இவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

விமான நிலைய கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குப் பாதுகாப்பான மறைவிடத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாக இவர் மீது கனடாவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு 65 சட்டவிரோத துப்பாக்கிகளைக் கடத்த முயன்ற வழக்கிலும் இவர் முக்கிய சந்தேக நபராக உள்ளார்.

துப்பாக்கி கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சக சந்தேகநபரான ட்ரான்டே கிங் மேக்லீனுக்கு அமெரிக்க நீதிமன்றம் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பரமலிங்கம் பென்சில்வேனியா மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். இந்தியாவில் பிறந்து கனடிய குடியுரிமை பெற்ற பரமலிங்கம் தன் மீதான துப்பாக்கி கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments