Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் பேக்கரி முதலாளியின் மனைவியை கொலை செய்த 38 வயது திலகனுக்கு மரணதண்டனை! நீதிமன்றில் நடந்தது...

மட்டு’வில் பேக்கரி முதலாளியின் மனைவியை கொலை செய்த 38 வயது திலகனுக்கு மரணதண்டனை! நீதிமன்றில் நடந்தது என்ன?

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் 2007 ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வியாழக்கிழமை (01) மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.

வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் இணைந்த பேக்கரிக்குள் கடந்த 2007 டிசம்பர் 25 ஆம் திகதி செங்கலடியைச் சேர்ந்த பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் அத்துமீறி உட்புகுந்து, தனிமையில் இருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியான நாகமுத்து பிறேமாவதியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரணைகளின் பின்னர், குறித்த வழக்கு மட்டு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுத் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது வழக்கு தொடுநர் தரப்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளியாக மன்றில் இனங்காணப்பட்டார்.

அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட முதலாவது குற்றமான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் பேக்கரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றத்திற்கு ஒரு வருடக் கடுூழிய சிறைத் தண்டனையும், இரண்டாவது குற்றமான அவரது மனைவியான நாகமுத்து பிறேமாவதியைக் கொலை செய்த குற்றத்திற்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வியாழக்கிழமை (01) மரண தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments