Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சுவீடன் வாழ் 61 வயது பெண்ணுக்கு வாழ்க்கைத் துணை தேவை!!

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சுவீடன் வாழ் 61 வயது பெண்ணுக்கு வாழ்க்கைத் துணை தேவை!!

வாழ்க்கைத் துணை தேவை – சுவீடன் வாழ் யாழ்ப்பாணப் பெண் (வயது 61)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இலங்கை வங்கியில் 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும் , திருமணமாகி 2002-ஆம் ஆண்டு சுவீடன் சென்று. அங்கு Gothenburg பகுதியில் Grocery Store ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வரும் பெண் தனக்கான வாழ்க்கைத் துணையை தேடுகின்றார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு சுவீடனில் கணவரை இழந்து (மாரடைப்பினால்), தொடர்ந்து 17 ஆண்டுகள் சுவீடனில் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், தற்போது தனது வாழ்நாளின் அடுத்த கட்டமாக ஆன்மீகப் பயணங்களில் ஈடுபட எண்ணியுள்ளார். ஆன்மீக நாட்டம் கொண்ட, அமைதியான ஒரு வாழ்க்கைத் துணையை அவர் எதிர்பார்க்கின்றார்.

வாழ்க்கைத் துணைக்கு தேவைப்படும் தகுதிகள் & நிபந்தனைகள்:
சாதி: யாழ்ப்பாண வெள்ளாளராக இருத்தல் வேண்டும்.

பிறந்த ஆண்டு: 1960 முதல் 1970-க்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

குடும்ப நிலை: திருமணமாகாதவராகவோ அல்லது மனைவியை இழந்தவராகவோ (Widower) இருக்கலாம். (விவாகரத்தானவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்).

பிள்ளைகள் இருந்தால், அவர்கள் திருமணமாகி தனித்து வாழ்பவர்களாக இருக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: பிள்ளைகளுக்குத் தெரியாமல் யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.

தொழில்: ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், ஓய்வுபெற்ற தனியார் துறை ஊழியர்கள் அல்லது தனியார் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் விரும்பத்தக்கது.

சுகாதாரம்: தொற்றா நோய்கள் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை) கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். (சமீபத்திய ரத்தப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

ஆன்மீக ஆர்வம்: இந்தியா முழுவதிலும் உள்ள ஆன்மீகத் தலங்கள், நேபாளத்தில் உள்ள கைலாய மலைக்கான கடினப் பயணம், மலேசியா, கம்போடியா மற்றும் பிற இந்து ஆன்மீகத் தலங்கள், உலகளாவிய சுற்றுலா மையங்களுக்குப் பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு: முதுமைக் காலத்தை பரஸ்பர அன்போடும், அந்யோன்யத்தோடும், சந்தோஷமாகக் கடப்பதற்கான தோழமையே முதன்மையானது. தொடர்ச்சியான தாம்பத்திய உறவு எதிர்பார்ப்புகளுடனோ அல்லது ஒழுக்கமற்ற பின்னணியுடனோ விண்ணப்பிப்பதைத் தவிர்க்கவும்.

விண்ணப்பிக்கு முறை – எமது வம்பன் இணையத்தளத்தின் வம்பன், vampan ஆகிய பேஸ்புக் மெசேஞ்சர்கள் மற்றும் கீழே காணப்படும் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுக்கு உங்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் புகைப்படம் மற்றும்  யாழ்ப்பாணத்தில் நீங்கள் வாழும் பிரதேசத்தின் முழு வீட்டு முகவரி, தற்போதைய உங்களது நிலை போன்றவற்றை மட்டும் அனுப்பவும். புகைப்படங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் விசாரணையின் பின்னர் நேரடியாக தொடர்பு கொண்டு பெறப்படும்.

தொடர்புக்கு: கனேடிய நேரம் காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 6 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம். 
[+14376887246 / WhatsApp / Email – [email protected]]

குறிப்பு – இந்த பதிவுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் விண்ணப்பிவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது புலனாய்வு ஊடகச் செயற்பாட்டாளர்கள் மூலம் அவர்களின் நடத்தைகள் ஆராயப்பட்ட பின் பொருத்தமானவர் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுவார்.  தரகர்கள் எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments