யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்கும் 18 வயதான ஓடுகாலி மாணவி ஒரே நேரத்தில் 3 பேருடன் காதல் உறவைப் பேணி பிடிபட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளாள். குறித்த மாணவி தனது பாடசாலையில் கற்கும் 19 வயதான மாணவன் ஒருவனையும் ரிக்ரொக்கில் பிரபலமான காவாலி ஒருவனையும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் மினவான் நடத்துனர் ஒருவரையும் ஒரே காலப்பகுதியில் காதலித்து வந்துள்ளாள். இவர்கள் 3 பேரிடமும் தனது காதலைச் சொல்லி திருமணம் செய்வதாக கூறியே காதலித்து வந்துள்ளாள்.
சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் நடந்த விளையாட்டுபு் போட்டியின் போது ரிக்ரொக் காதலன் அங்கு வந்து குறி்த்த மாணவியுடன் கதைக்க முற்பட்ட போது மாணவி அவனை அங்கிருந்து அகற்ற முற்பட்டுள்ளாள். இதனை நேரில் கண்ட பாடசாலை மாணவனான காதலன் ரிக்ரொக் காதலனுடன் சண்டைக்கு சென்று அதன் பின்னர் பாடசாலைச் சமூகத்தால் ரிக்ரொக் காதலன் அங்கிருந்து அகற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னர் பாடசாலைக் காதலனுக்கும் ரிக்ரொக் காதலனுக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வந்ததுடன் இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த மாணவி பாடசாலைக் காதலனால் வகுப்புக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதன் பின்னரே மாணவியின் பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மாணவி பாடசாலைக்கு செல்வதை பெற்றோர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மாணவி மினவான் ஒன்றிலேயே பாடசாலைக்கு சென்று வந்துள்ளார். அந்த மாணவி பாடசாலைக்கு செல்வதை நிறுத்தியதால் மினவான் நடத்துனரான 27 வயதான இளைஞன் மாணவி பாடசாலைக்கு வராத காரணத்தை அறிய முற்பட்டு அவளது வீடு தேடிச் சென்று அவளை வீட்டில் சந்திக்க முற்பட்ட வேளை அங்கு முறுகல் நிலை உண்டாகியுள்ளது. மினிவான் சாரதி மாணவியின் பெற்றோர் மற்றும் அயலவர்களால் பிடித்து வைக்கப்பட்ட போது தான் மாணவியை காதலிப்பதாக கூறி மாணவியும் தன்னை காதலிப்பதாக கூறியதால் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாணவியின் வீட்டுக்கு ஏற்கனவே இரு தடவைகள் மாணவனும் ரிக்டொக் காதலனும் சென்று வன்முறையில் ஈடுபட முற்பட்டு அயலவர்கள் மற்றும் உறவுகளால் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே மினவான் நடத்துனரும் அங்கு சென்றுள்ளான். கடும் எச்சரிக்கையின் பின் மினவான் சாரதி அங்கிருந்து துரத்தப்பட்டான்.
இதன் பின்னர் மாணவியை மாணவியின் தந்தை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகின்றது. தாக்குதலையடுத்து மாணவி அங்கிருந்து ஓடிச் சென்று அயலவர் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த கிணற்றுக்குள் பாய்ந்துள்ளாள். கடும் முயற்சியின் பின் மாணவி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.





