Home புதினங்களின் சங்கமம் லண்டனில் மனநல வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய 19 வயது தமிழ் யுவதி சோபியா பலி!...

லண்டனில் மனநல வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடிய 19 வயது தமிழ் யுவதி சோபியா பலி! நடந்தது என்ன?

பிரித்தானியாவில் மனநல மருத்துவமனையிலிருந்து வெளியேறிய 19 வயது தமிழ் யுவதி உயிரிழப்பு: NHS நிர்வாகம் மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் தென் லண்டனைச் சேர்ந்த சோவியா ராஜரட்ணம் (வயது 19) என்ற இளம்பெண், மனநல மருத்துவமனையிலிருந்து வெளியேறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பிரித்தானிய தேசிய சுகாதார சேவை (NHS) மீது அவரது குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அவரைப் பாதுகாப்பான நீண்டகால புனர்வாழ்வு மையத்தில் அனுமதிப்பதற்கு அதிக செலவாகும் எனக் கூறி, NHS நிர்வாகம் அந்த வாய்ப்பை மறுத்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணை விவரங்கள்:

கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சோவியா ராஜரட்ணம், மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பான மரண விசாரணை லண்டன் குரோய்டன் நீதிமன்றத்தில் (Croydon Coroner’s Court) இடம்பெற்றது. அவரைப் பாதுகாப்பான மறுவாழ்வு பிரிவில் (Locked Rehab Unit) உரிய காலத்தில் அனுமதித்திருந்தால், அவரது உயிரிழப்பைத் தடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம் என நீதிமன்ற ஜூரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றுவதற்கு அதிக செலவாகும் என்று கூறப்பட்டது குறித்து, மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் சோஹோம் தாஸ் (Dr Sohom Das) நீதிமன்றத்தில் ஆச்சரியமும் குழப்பமும் வெளியிட்டார். ஒரு நோயாளியின் மருத்துவத் தேவையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சோவியா தீவிர மனநலப் பாதிப்புகளுக்காக றோயல் பெத்லெம் மனநல மருத்துவமனையில் (Bethlem Royal Hospital) அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனை ஊழியர்களின் கண்காணிப்பில் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவருக்கு நீண்டகால தீவிர சிகிச்சை மறுக்கப்பட்டதே இந்த துயர முடிவுக்குக் காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments