Home புதினங்களின் சங்கமம் அநுராதபுரத்தில் மனைவியின் தாயார் படுத்திருந்த போது உள்ளே புகுந்து கற்பழித்த ஆமிக்காரன் கைது!

அநுராதபுரத்தில் மனைவியின் தாயார் படுத்திருந்த போது உள்ளே புகுந்து கற்பழித்த ஆமிக்காரன் கைது!

அநுராதபுரம் திரப்பன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 68 வயதுடைய தனது மாமியாரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
திரப்பன பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்று முன்தினம் (23) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய இராணுவச் சிப்பாய் எனவும், அவர் இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் மூத்த மகளின் கணவர் எனவும், அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் மருமகன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று குறித்த 68 வயதுடைய பெண் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, சந்தேகநபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த பெண் சத்தமிட்டால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்திய பின்னர், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் சம்பவம் தொடர்பில் உடனடியாக வெளியில் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்த குறித்த பெண், பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட திரப்பன பொலிஸார், சந்தேகநபரான இராணுவச் சிப்பாயை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திரப்பன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments