திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தினேஸ் வெதுப்பகம் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றினால் சீல் வைத்து மூடப்பட்டது.
இந்த மாதம் 10.09.2026ம் திகதி திருநெல்வேலியில் இயங்கும் பிரபல வெதுப்பகமான தினேஸ்வெதுப்பகம் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது தொழிலாளர் மருத்துவ சான்றிதழ் பெறப்படாமை, சுட்டுத்துண்டு இன்றிய நிலையில் கேக் காணப்பட்டமை, அச்சிடப்பட்ட தாள்களின் பயன்பாடு, தனிநபர் சுகாதாரமின்மை உள்ளிட்ட 12 குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாமையினால் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் இன்று 22.09.2026ம் திகதி மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரணை செய்த நீதவான், எதிரி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து 36,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை சீல் வைத்து மூடுமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது.





