Home புதினங்களின் சங்கமம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு! Video

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிப்பு! Video

2019 உயிரத்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, குறித்த 24 பிரதிவாதிகளில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 09 பிரதிவாதிகளையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் இன்று (22) அறிவிக்கப்படவுள்ளன.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உட்பட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்திருந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி சாட்சி விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்தன.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் வழக்குத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளதை முன்னிட்டு நீதிமன்றப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு: விசேட அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு

குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளோர்

1.முஹம்மத் இப்ராஹிம் முஹம்மது நௌபர்
2.முஹம்மமது சரீப் ஆதம்லெப்பே (கபூர் மாமா)
3.ஹயாத்து முஹம்மது மில்ஹான்
4.முஹம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா
5.முஹம்மது இப்ராஹிம் சாதித் அப்துல் ஹக்
6.முஹம்மது அஸ்வர் முஹம்மது ரிஸ்கான்
7.முஹம்மது மன்சூர் முஹம்மது சனாஸ்தீன்
8.அப்துல் மனாப் முஹம்மத் பிர்தௌஸ்
9.முஹம்மது ரமீஸ் முஹம்மது சாஜித்

10. அப்துல் லதீப் முஹம்மது சாபி (மௌலவி)

11. ஹுசைனுல் ரிஸ்வி காலித்
15 . முஹம்மது ஹனீபா ஜெய்னுல் ஆப்தீன்
16. முஹம்மத் முஸ்தபா முஹம்மத் ஹாரிஸ்
18. ராசிக் ராசா ஹுசைன்
19 கச்சி முஹம்மது ஜெஸ்மின்

விடுதலையானோர்
முஹம்மத் சவாஹிர் முஹம்மது ஹசன்
முஹம்மத் இப்திகார் முஹம்மத் இன்சாப்
ரஷீட் முஹம்மத் இப்ராஹிம்
யாசின் பாவா அப்துல் ரவூப் (இறப்பு)
செய்னுல் ஆப்தீன் முஹம்மது ஜசீன்
முஹம்மது முஸ்தபா முஹம்மத் ரிஸ்வான்
மீரா சாஹிப் முஹம்மத் நப்லி
முஹம்மத் அமீன் ஆயத்துல்லா
முஹம்மது அன்சார் ஹில்மி
முஹம்மது அக்ரம்

இவர்களில்

ஈஸ்டர் தாக்குதல்: நீதிமன்றத்தினால்இன்று (22) குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 15 பேரின் விபரம்,

1. முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

2. முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

3. ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

4. முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

5. முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

6. முகம்மது அன்வர் முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

7. முகம்மது மன்சூர் முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

8. அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

9. முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

10. ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

11. முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

12. முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

13. ராசிக் ராஸா ஹுஸைன் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

14. கச்சி முகம்மது ஜஸ்மின் – அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

15. அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்) – ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு; ஏனைய அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள அனைத்துப் பிரதான பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாதவாறு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் மற்றும் தீர்ப்பின் அடுத்தகட்ட உத்தியோகபூர்வ பிரகடனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்கப்படவுள்ளதால், புதுக்கடை நீதிமன்ற வீதிகள், நுழைவாயில்கள் மற்றும் பாதுகாப்புச் சாவடிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் ஆயுதம் தாங்கிய விசேட பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு வருகை தரும் நபர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்தும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments