குவைத்தின் சால்மியாவில் 37 பொட்டலம் போதைப்பொருட்களுடன் இரண்டு இலங்கை நாட்டவர்கள் கைதாகியுள்ளனர்:
குவைத் உள்துறை இன்று(08|09|26) சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்தியில் ஹவாலி ஆளுநரக பாதுகாப்பு இயக்குநரகத்தின் ரோந்துப்படை சார்பில், அப்பகுதியில் வழக்கமான சோதனை பணிகளை மேற்கொண்டிருந்தபோது இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன எனவும்,
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இந்த இருவரையும் ஒரு திறந்தவெளியில் எதையோ தேண்டிக்கொண்டிருப்பதைக் கண்டனர். விசாரணைக்காக போலீசார் அவர்களை அணுகியபோது, சந்தேக நபர்களில் ஒருவர் தப்பி ஓட முயன்றார், ஆனால் காவலர்கள் அவனை துரத்தி பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து இரு நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 37 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில், முதல் நபரிடமிருந்து 27 பொட்டலங்களும், இரண்டாவது நபரிடமிருந்து 10 பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கூடுதல் சட்ட நடவடிக்கைக்காக இருவரும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.





