Home புதினங்களின் சங்கமம் தொலைபேசி மூலம் அழைத்து வரவழைக்கப்பட்ட மாணவி! ஒதுக்குப் புறமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் வைத்து 5 காவாலிகளுடன்...

தொலைபேசி மூலம் அழைத்து வரவழைக்கப்பட்ட மாணவி! ஒதுக்குப் புறமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் வைத்து 5 காவாலிகளுடன் உடல் உறவு! திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை செருவில புனிதப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றினுள் வைத்து பள்ளி மாணவி ஒருவரைச் சிலர் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னிலையில் மாணவியை வன்புணர்ந்த சம்பவம் தொடர்பாக, சேருநுவர காவல்துறையினர் ஐந்து சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல்
பெரஹெரா திருவிழாவின் போது சிறப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த முத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு அந்த மாணவியை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அதற்குள்ளாகவே மூன்று இளைஞர்கள் மாணவியை வன்புணவுர்க்கு உடபடுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக ஏற்பட்ட காதல் உறவு மூலம் அந்த மாணவியை ஏமாற்றி, பெரஹெரா திருவிழாவைப் பார்ப்பதற்காகச் செருவிலவுக்கு வரவழைத்தே கூட்டாகப் வன்புணர்வு செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி வழங்கிய தகவலின் அடிப்படையில், இக்குற்றத்தைச் செய்த முக்கிய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் என மொத்தம் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாலியல்தாக்குதலுக்குள்ளான மாணவி மேலதிக சிகிச்சைக்காகக் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் முத்தூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் , மீலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments