Home புதினங்களின் சங்கமம் இங்கிலாந்து போயும் சிங்களவனுக்கு அடங்காத குஞ்சுமணி! 8 மாத சிறை! நடந்தது என்ன?

இங்கிலாந்து போயும் சிங்களவனுக்கு அடங்காத குஞ்சுமணி! 8 மாத சிறை! நடந்தது என்ன?

பெண்ணுக்கு தொல்லை – இலங்கையருக்கு 8 மாத சிறை

இங்கிலாந்தில் Stoke இலிருந்து Manchester நோக்கி சென்ற ரயிலில் பெண்ணொருவருக்கு தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 39 வயதுடைய இலங்கையருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Altrincham, Troutbeck Road பகுதியை சேர்ந்த Nisan Fernando Gurukulasuriya என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஏப்ரல் 20ஆம் திகதி, ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அறிமுகமில்லாத பெண்ணொருவருக்கு அருகில் குறித்த நபர் அமர்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் அவரது நடவடிக்கை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண், ரயில் Manchester Piccadilly நிலையத்தை சென்றடைந்ததும் உடனடியாக ரயில்வே ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார்.

இதை அடுத்து British Transport Police அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், அதிகாரிகள் விரைந்து சென்று நபரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் இரு குற்றங்களை அவர் ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த Manchester Crown Court, அவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், அவருக்கு 10 ஆண்டுகளுக்கான Prevention Order பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளுக்கு பா லி யல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய British Transport Police அதிகாரிகள், சம்பவத்தை உடனடியாகத் தெரிவித்த பெண்ணின் நடவடிக்கையை பாராட்டியுள்ளனர்.

இத்தகைய சம்பவங்களை எதிர்கொள்ளும் பொதுமக்கள் அச்சமின்றி உடனடியாக காவல் துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments