அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாண மாணவன் சபின்!
இன்று (02.09.2026) மாலை வெளியான 2026 தரம்-05 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய யாழ். மல்லாகம் கலாநிதி.தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலய மாணவரான சு. சபின் தமிழ்மொழியில் அகில இலங்கை ரீதியாக 188 எனும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுச் சாதித்துள்ளார்.
சைவத்துக்கும், தமிழுக்கும் அளப்பரிய தொண்டுகளாற்றிய தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் பெருந் தலைவரான சிவத்தமிழ்ச் செல்வி. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பெயரில் இயங்கும் ஒரு கிராமப்புறப் பாடசாலை இவ்வாறு சாதனையை நிலைநாட்டியமை மகிழ்ச்சிக்குரியது.
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்….

