புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சிறுவன்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராமத்தில் நேற்று ( 01/09/2026) செவ்வாய்க்கிழமை அன்று நீர் நிரம்பிய வாளியில் தவறுதலாக விழுந்த நந்தகோபன் கிஷோத் எனும் இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று தனது வாசலின் முன் இருந்த நீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக தவறுதலாக விழுந்த குழந்தை மீட்கப்பட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்
உண்மையில் இவ்வாறான இழப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவைதான் திருமணமாகி 8 வருடங்கள் குழந்தையில்லாமல் இருந்து பல கடவுள்களை வேண்டி தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையை என்றும் பிரிந்திருக்காத தாய் எங்கு சென்றாலும் குழந்தையை கையோடு கூட்டிச் செல்லும் தாய் நேற்றையதினம் அவசர தேவை ஒன்றின் நிமிர்த்தம் குழந்தையை வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
கொக்கட்டிச்சோலை பகுதியில் 2020 ம் ஆண்டும் நீர் நிரம்பிய பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of child and smiling

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x