வட பகுதி மக்களுக்கு அபாய எச்சரிக்கை!! அவதானம் மக்களே!!
வட மாகாணத்தின் சில பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வவுனியாவில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எலிகள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் மூலமாகவே லேப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோய் பரவுகிறது.
இலங்கையில் ஏனைய மாவட்டங்களில் இந்த நோயின் தாக்கம் பரவலாகக் காப்பட்டாலும் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் சற்றுக் குறைவானதாகவே காணப்படுகிறது.
எனினும், மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாகாணங்களில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.