சாவகச்சேரி வைத்தியரின் காரை அடித்து நொருக்கி காவாலிகள்!! காரணம் வைத்திய அதிகாரியா??
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் கார்
இனம்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. கடந்த 6ம் திகதி நடந்த இந்த
சம்பவத்தில், மர்மக் கும்பல் ஒன்று வைத்தியரை விரட்டி சென்று, கார் மீது தாக்குதல்
நடத்தியுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலையின் சில குறைபாடுகள் தொடர்பாக இந்த வைத்தியர் அண்மைக்காலமாக குரல் கொடுத்திருந்தார். வைத்தியசாலை பொறுப்பதிகாரியினால் தனக்கு இழைக்கப்படும் அநீதி, தகுதியற்ற நிர்வாக உத்தியோகத்தரால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் சுகாதார திணைக்களத்தில் இவர் முறையிட்டும், உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென குறிப்பிட்டு, பல விடயங்களை அம்பலப்படுத்தி சாவகச்சேரி நீதவானிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
தகுதியற்ற நிர்வாக அதிகாரியால் தான் திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாக பல்வேறு தகவல்களை
அதில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், வைத்தியரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைக்குள் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பிடுங்குப்பாடுகள் குறித்தும் பொலிசார் கவனம் செலுத்தியுள்ளனர்.

