புதினங்களின் சங்கமம்

விலேஜ் ஹோட்டல் என்ற பெயரில் ஓடும் யாழ் சொகுசு பேரூந்து சாரதி நிறை வெறியில் கொழும்பில் கைது!! 30 பயணிகள் நடுவீதியில் அந்தரிப்பு!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..

நேற்று யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அன்னை முத்துமாரி ரவல்ஸ்க்கு சொந்தமான விலேஜ் ஹோட்டல் என்ற பெயருடன் இயங்கும் சொகுசு பஸ்சின் சாரதி நிறை வெறியில் பஸ்சை செலுத்திய போது கைது செய்யப்பட்டார். கொழும்பு ஆமர் வீதியில் இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பஸ்சில் 30க்கும மேற்பட்ட பயணிகள் அந் நேரத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்காக இருந்ததாக தெரியவருகின்றது.