மாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் உயிரிழப்பு! CCTV Video
கொழும்பு, மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில் உந்துருளியில் பிரவேசித்தஇருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் தப்பியோட்டம்
மாளிகாவத்தை, BCC பாலத்திற்கு அருகில் இன்று (10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




