யாழில் காலாவதியான மருந்துகள விநியோகித்த நொதேன் வைத்தியசாலை! நோயாளர்களை கொல்ல முயற்சியா! பல லட்சம் அபராதம்! நடந்தது என்ன?
சமூகவலைத்தளத்தில் வந்த தகவலை அப்படியே தந்துள்ளோம்.
செய்தி :-
காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை மற்றும் மருத்துவ நிலையத்திற்கு 4 இலட்சம் ரூபா அபராதம்! நீதிமன்றத் தீர்ப்புகளை பத்திரிகைகளில் வெளியிடவும் உத்தரவு! 🩺🏥⚖️
1️⃣ Northern Central Hospitals (Pvt) Ltd — திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
📅 சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி: 2026.07.29
🔎 கண்டறியப்பட்ட விடயங்கள்:
கண் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் காலாவதியான Tropicamise with phonlyphone Auromidpls 5ml மருந்துத் திரவங்களை குளிரூட்டியில் வைத்து காட்சிப்படுத்தியமை, மருந்துகள் தயாரிக்கும் இடத்தில் காலாவதியான Ether Liquid மற்றும் Hydrogen Peroxide திரவங்களைப் பயன்பாட்டிற்காக வைத்திருந்தமை மற்றும் காலாவதியான Sterile Plashmatube அறுவைச் சிகிச்சை உபகரணங்களை காட்சிப்படுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
⚖️ அபராதம் விதிக்கப்பட்ட திகதி: 2026.08.04
மூன்று குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 100,000 ரூபா வீதம் மொத்தமாக 300,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
2️⃣ New Sun Rise Medi Clinic — நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
📅 சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி: 2026.07.14
🔎 கண்டறியப்பட்ட விடயங்கள்:
Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்காக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் நிர்ணயிக்கப்பட்ட 400/- ரூபா அதிகபட்சக் கட்டணத்தை மீறி 550/- ரூபா அறவிட்டதன் மூலம் பணிப்புரை இலக்கம் 67 மீறப்பட்டமை தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டது.
⚖️ அபராதம் விதிக்கப்பட்ட திகதி: 2026.08.04
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 100,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
⚠️ விசேட நீதிமன்ற உத்தரவு
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 60(6) ஆம் பிரிவுக்கு அமைவாக, இவ்விரு மருத்துவ நிறுவனங்களுக்கும் எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிகைகளில் வெளியிடுமாறும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
📞 அதிகபட்சக் கட்டணத்தை மீறி மருத்துவப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் அறவிடும் அல்லது காலாவதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வைத்திருக்கும் தனியார் வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக உடனடியாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்கவும்.

