புதினங்களின் சங்கமம்

உறுப்புகளுக்கு மின்சாரம் செலுத்தினர்!! தொலைபேசியை ஓப் செய்த சரவணபவனும் ஆர்னோல்ட்டும்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

உதவி கோரிய போது தொலைபேசியை ஓப் செய்த சரவணபவபாடசாலை மாணவா்களுக்கு புத்தக பைகள் வழங்கியது குற்றம் என கூறிய பொலிஸாா் மற்றும் இராணுவத்தினால் மோச மான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தமக்கு ஆறுதலளிக்கும் வகையில் நீதி வழங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள யாழ்.புன்னாலைகட்டுவனை சோ்ந்த து.லோகேஸ்வரன் தப்பியுள்ள குற்றவாளிகளும் தண்டிக்கப்படவேண்டும் என கூறினாா்.

நேற்றய தினம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா்களை சந்தித்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடா்பாக கூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்

2011ம் ஆண்டு காா்த்திகை மாதம் 2 1ம் திகதி பெற்றோரை இழந்த பாடசாலை மாணவா்களுக்காக 110 புத்தக பைகளை தற்போதைய யாழ்.மாநகர முதல்வா் இ.ஆனல்ட் வழங்கியிருந்தாா். அதனை நானும் சுமணன் உள்ளிட்ட சிலரும் இணைந்து மாணவா்களுக்கு வழங்கினோம்.

அப்போது அங்குவந்த இராணுவ புலனாய்வாளா்களும்இ மாவீரா் நாளுக்காக புத்தக பைகளை வழங்குகிறீா்களா? எ ன கேட்டிருந்தனா். ஆனால் அப்படியான நோக்கத்தில் நாங்கள் புத்தக பைகளை கொடுக்கவில்லை. என்பதை அப்போதே கூறியிருந்தோம்.

பின்னா் அன்றைய தினம் இரவு 10 மணியளவில் எங்கள் வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினா்இ மற்றும் பொலிஸாா் வீடொன்றுக்குள் புகுந்து பல லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டதாக குற்றஞ்சாட்டி என்னையும் சுமணனையும் கைது செய்தாா்கள்.

கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட வீட்டின் உாிமையாளரான பெண்
அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் மிக நெருக்கமான உறவை பேணிய ஒருவா். இந்நிலை யில் கைது செய்யப்பட்டு நேரடியாக ஊரெழு இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட நாம் அங்கு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம்.

எனது உடலில் மின்சாரம் பாய்ச்சினாா்கள் சூடேற்றப்பட்ட கம்பிகளால் சுட்டாா்கள்இ பிளேட்டுகளால் வெட்டினாா்கள். பின் னா் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கும் சித்திரவதை மேற்கொண்ட நிலையிலேயே சுமணன் உயிாிழந்தாா். பின் 5 நாட்கள் கடந்த நிலையில் 2011 காா்த்திகை 26ம் திகதி நீதிமன்றில் ஆஜா் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டோம்.

களவு எடுத்ததாக சுமத்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு தொடா்பான வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தை நாங்கள் நீதிபதிக்கு கூறியதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவா்கள் கை து செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.

மறுபக்கம் சுன்னாகம் பொலிஸாா் இராணுவத்தினா் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாியுடன் நெருக்கமான உறவை பேணிய பெண் ஆகியோாினால் சோடிக்கப்ப ட்ட கொள்ளை வழக்கும் பொய் வழக்கு என்பது நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ளதுடன்இ குறித்த பெண் மீது இழப்பீடு கோாி சிவில் வழக்கு தொடருமாறும் நீதிபதியால் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நீதி எமக்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும்இ சித்திரவதை மற்றும் கொலைகளுடன் சம்மந்தப்பட்ட பலா் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கின்றாா்கள். 2018ம் ஆண்டு நவம்பா் மாதம் என்னுடைய தலையில் துப்பாக்கியை வைத்து சாட்சி சொல்வதற்காக செல்லகூடாது என அச்சுறுத்திய பொலிஸ் அதிகாாி இன்னும் வெளியில் நடமாடுகிறாா்.

மேலும் கடந்த வருடத்தின் கடைசிவரையில் புலனாய்வாளா்கள் என்னை நின்மதியாக வாழவிடவில்லை. இது மோசமான இன அழிப்பு எப்படி நடந்தது என்பதற்கு உதாரணமும் கூட. அதேபோல் புத்தக பைகளை வழங்கிய இப்போதைய யாழ்.மா நகர முதல்வா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா் சரவணபவன் ஆகியோரும் எங்கள் விடயத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

5 பிள்ளைகளுடன் என்னுடைய மனைவி இவா்களிடம் உதவி கேட்டபோது இவா்கள் தொலைபேசியை ஓவ்செய்து வைத்தவா்கள். ஆனால் சட்டத்தரணி மணிவண்ணன் ஒரு ரூபாய் பணமும் கேட்காமல் 8 வருடங்கள் வழக்கை நடாத்தி நீதியை பெற்றுக் கொடுத்தாா் என்றாா். னும் ஆர்னோல்ட்டும்