கொழும்பில் இன்று இரவு இடம்பெற்ற பயங்கரம் – துப்பாக்கித் தாக்குதல்கள்!! ஒருவர் பலி
கொழும்பு – ஜம்பட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இன்று (08) இரவு 7.50 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜம்பட்டா வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான்.
24 வயதுடைய சூரியகாந்த் என்ற 131 தோட்டம், ஜம்பட்டா வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

