Home புதினங்களின் சங்கமம் நயினாதீவு அம்மன் மாதவிடாய்க்கு கோட்டைக்ஸ் பாவிக்கின்றாரா? நயினாதீவில் நடப்பது என்ன?

நயினாதீவு அம்மன் மாதவிடாய்க்கு கோட்டைக்ஸ் பாவிக்கின்றாரா? நயினாதீவில் நடப்பது என்ன?

இந்துப் பெண் கடவுளை நாம் அவமதிப்பது போல் வாசகர்களுக்கு தோன்றலாம். ஆனால் அங்கு நடக்கும் செயல்கள் சில சகிக்க முடியாதவாறு உள்ளன.

கடந்த 29ம் திகதி நயினாதீவில் நேர்த்திக் கடன் நிறைவேற்றுதவற்காக தனது மகளுடன் சென்ற குடும்பப் பெண் பெரும் அதிர்ச்சியை எதிர்நோக்கியுள்ளார். தனது மகளுக்கு நாகதோசம் நீங்குவதற்கான நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக சில நாட்களுக்கு முன்னரே 3500 ரூபா கட்டி முற்பதிவு செய்து கடந்த புதன் கிழமை அங்கு சென்றுள்ளார்.

குறித்த நேர்த்திக் கடனை நிறைவேற்ற முற்பதிவு செய்வது அவசியம் எனவும் அதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு 10 பேருக்கு மட்டுமே அந் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்த நேர்த்திக் கடனை கழிப்பவர்கள் கோவில் தீர்த்தக்கரையான கடற்கரையில் தாங்கள் உடுத்தி வந்த ஆடைகளுடன் குளித்து விட்டு அங்கேயே கழற்றி வைத்துவிட்டு அதை எடுக்கது புத்தாடை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும். அவ்வாறே அவர்கள் செய்துள்ளார்கள்.

அவர்கள் குளிப்பதற்காக கோவில் நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே பல நாட்களாக அங்கு குளித்து சென்ற பெண்களின் உள்ளாடைகள் முதல் அனைத்து ஆடைகளும் கடற்கரையில் பரவிக் காணப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் மலசல கூடப் பகுதியில் பெண்களின் மலசலகூடம் மற்றும் ஆடைகள் மாற்றும் பகுதியில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பாவிக்கும் கோட்டைக்ஸ் பாவித்த நிைையில் காணப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்த புலம்பெயர் தமிழ்ப் பெண்களும் இதனை நேரடியாக அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் குறித்த மலசல கூடப்பகுதி காலை 10 மணியான பின்னரும் முதல்நாள் பாவித்த நிலையில் அப்படியே மிகவும் அசிங்கமான நிலையில் காணப்பட்டதாகவும் எந்தவித துப்பரவும் இல்லாது இருந்ததாகவும் குறித்த குடும்பப் பெண் அதிர்ச்சியுடன் தகவல் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு புனிதம் மிகுந்த கோவில். தமிழ்ப் பெண்கள் ஒரு போதும் மாதவிடாயுடன் கோவிலுக்கு வருவதற்கு கனவிலும் நினைக்க மாட்டார்கள். சுற்றுலாவாக வந்த வேறு மதப் பெண்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால் இவ்வாறான கோட்டைக்ஸ் அங்கு காணப்பட்டுள்ளதை எண்ணும் போது கோவில் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பெரும் விசனத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை கோவில் மண்டபங்களில் சொறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் படுத்திருப்பதுடன் கோவிலுக்கு வருபவர்களை கடிப்பதற்கு துரத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன் கோவல் முற்பகுதியிலேயே குறித்த நாய்கள் மலங்கழிப்பதாகவும் தெரியவருகின்றது. அப்பகுதியில் திரியும் இவ்வாறான நாய்களை பிடித்து அற்றை நாய்கள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப அப்பகுதி பிரதேசசபை முயற்சி செய்யுமா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

கோடிகளில் புரளும் நயினாதீவு அம்மன் கோவில் நிர்வாகம் கோயில் சுற்றாடலை துாய்மையாக வைத்திருப்பதில் அசண்டையீனமாக உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இச் சமபவம் தொடாபாக நயினாதீவு கோவில் நிர்வாகத்திற்கு மேலதிக தகவல்கள் வேண்டும் எனின் குறித்த குடும்பப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை நாம் தருவோம். [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

May be an image of one or more peopleNo photo description available.No photo description available.